இந்தியா

ஹ்ம்ம்.. இந்தாங்க.. மாட்டுச்சாணத்தை சாப்பிடுங்க.!! மாங்காய் திருடியதாக 2 சிறுவர்களுக்கு நடந்த கொடுமை..

Summary:

மாங்காய் திருடியதாக கூறி சிறுவர்களை மாட்டுச்சாணம் தின்ன வைத்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காய் திருடியதாக கூறி சிறுவர்களை மாட்டுச்சாணம் தின்ன வைத்த கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது தெலுங்கானா மாநிலம் மஹ்பூபாபாத்தில் நடந்துள்ளது. தொரூரின் சாய்பாபா நகரைச் சேர்ந்த 16 மற்றும் 13 வயது சிறுவர்கள் இருவர் சுவர் ஏறிக்குதித்து அருகில் இருந்த மாந்தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். தோட்டத்திற்குள் இருந்த சிறுவர்களை பார்த்த காவலாளிகள் யாக்கு மற்றும் ராமுலு இருவரும் சிறுவர்களை பிடித்து குச்சியால் அடித்துள்ளனர்.

சிறுவர்கள் இருவரும் மாந்த்தோப்பிற்குள் புகுந்து மாங்காய் திருடியதாக கூறி, சிறுவர்கள் இருவரையும் கைகளை கட்டி, மாட்டுச்சாணத்தை வலுக்கட்டாயமாக காவலாளிகள் சாப்பிட வைத்துள்ளனர். இந்த காட்சிகள் வீடியோவாக இணையத்தில் வெளியாகி கடும் வைரலானது.

இந்நிலையில் சிறுவர்களின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து, சம்மந்தப்பட்ட காவலாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீதி வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுவர்கள் கூறும்போது, "தாங்கள் இருவரும் தோப்பிற்குள் மாங்காய் பறிக்க செல்லவில்லை எனவும், காணாமல் போன தங்கள் நாய்யை தேடியே அங்கு சென்றதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement