திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கால் உடல்நலம் பாதிப்பு.! 137 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை.! நடந்தது என்ன??

திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கால் உடல்நலம் பாதிப்பு.! 137 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை.! நடந்தது என்ன??


137 students admitted hospital for food poision

விடுதி கேண்டீனில் உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மங்களூருவில் சக்திநகர் பகுதியில்
தனியார் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு படித்து வரும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு திடீரென ஒரே நேரத்தில் வயிற்றுப்போக்கு, வாந்தி என உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 மாணவர்கள் அனைவரும் விடுதி கேண்டினில் உணவு சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே ஹாஸ்டலில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புட் பாய்சன் ஏற்பட்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுமார் 137 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில் மங்களுரூ போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் கல்வி நிறுவனத்திடம் மாணவர்களுக்கு புட்பாய்சன் ஏற்பட என்ன காரணம்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.