"மாத்தி யோசி..." 13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் கொடுத்த மஹிந்திரா.!! அலெக்சா மூலம் காப்பாற்றிய அக்கா.!!

"மாத்தி யோசி..." 13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் கொடுத்த மஹிந்திரா.!! அலெக்சா மூலம் காப்பாற்றிய அக்கா.!!



13-year-old-girl-who-saves-her-sister-using-alexa-got-j

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தன்னையும் தனது தங்கையையும் அலெக்சா மூலம் குரங்குகளிடமிருந்து காப்பாற்றிய சிறுமிக்கு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா ஜாப் ஆஃபர் வழங்கியிருக்கிறார். உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பஸ்டி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி நிகிதா மற்றும் அவரது தங்கை ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.

Alexaஇவர்களது வீட்டிற்கு வந்த உறவினர்கள் வீட்டின் வெளிக் கதவை மூடாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் சுற்றி திரிந்த குரங்குகள் இவர்கள் அது வீட்டிற்குள் புகுந்துள்ளது. மேலும் குரங்குகள் நிகிதா மற்றும் அவரது தங்கையை தாக்க முற்பட்டுள்ளது. அப்போது அறிவுப்பூர்வமாக செயல்பட்ட நிகிதா தனது வீட்டில் இருந்த கூகுள் அலெக்சா கருவியின் மூலம் நாய் குரைக்கும் சத்தத்தை எழுப்ப கட்டளை பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அலெக்சாவும் நாய்கள் குரைக்கும் சத்தத்தை ஒலித்தது. இதனைக் கேட்ட குரங்குகள் நிஜமாகவே நாய்கள் தான் வருகின்றன என்று பயந்து வீட்டில் இருந்து வெளியேறியது. இதனால் நிகிதா மற்றும் அவரது தங்கை ஆகியோர் குரங்குகளிடமிருந்து தப்பித்தனர். இந்த சம்பவத்தில் சிறுமி நிகிதாவின் புத்தி கூர்மையை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

தனது புத்திசாலித்தனத்தால் குரங்குகளிடமிருந்து தன்னையும் தனது தங்கையின் உயிரையும் காப்பாற்றிய நிகிதாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதாக அதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்திருக்கிறார். வரும் காலத்தில் நிகிதா விருப்பப்பட்டால் அவர் எப்போது வேண்டுமானாலும் மஹிந்திரா நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார்.