தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தந்தைக்கு உணவு கொண்டு சென்ற 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! கதறும் விவசாயி
மேற்குவங்கத்தில் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கு உணவு எடுத்துச் சென்ற 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கம் ஹசிதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. ஆறாம் வகுப்பு படித்து வரும் அந்த 12 வயது சிறுமி வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். இந்த கிராமம் கொல்கத்தாவிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வயலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தனது தந்தைக்கு உணவு கொடுப்பதற்காக கடந்த புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த சிறுமி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். தனது தந்தைக்கு உணவை கொடுத்த சிறுமி மாலை 4 மணி வரை மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
4 மணிக்கு மேல் தான் வயலில் இருந்த தந்தைக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகு அவர் இந்த ஊரைச் சேர்ந்த மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குழந்தையை தேடத் துவங்கினார். இரவு 8 மணி அளவில் அந்த சிறுமி அருகில் இருந்த வயலில் பிணமாக கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். சிறுமியின் உடலில் பல இடங்களில் காயம் மற்றும் கீறல்கள் இருந்துள்ளன. மேலும் அவளின் கைகள் கைகள் கட்டப்பட்டு வாயில் துணியும் இருந்துள்ளது.
சிறுமி சில ஆசாமிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த சிறுமியின் தந்தை உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அடையாளம் தெரியாத அந்த நபர்களை தேடி வருகின்றனர்.