இந்தியா

பார்ட்டி தருவதாக கூறி 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பள்ளி மாணவர்கள்!

Summary:

12 year girl gang raped and murdered

அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் 12 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் பிணமாக தூக்கில் தொங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என உறுதியாகியுள்ளது.

இந்த குற்றப் பிண்ணனியில் ஈடுபட்ட 7 சிறுவர்களை காவல் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 10 வகுப்பு பயிலும் சிறுவர்களே ஆவர்.

10 வகுப்பு தேர்வினை முடித்துவிட்ட இவர்கள் ஒரு பார்ட்டி வைப்பதாக கூறி அந்த சிறுமியை அழைத்துள்ளனர். அவர்களை நம்பி சென்ற அந்த சிறுமியை 7 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் இதனை மறைப்பதற்காக அந்த சிறுமியே தற்கொலை செய்தது போல் காண்பிக்க அவரை அருகில் இருந்த காட்டுப்பகுதியின் ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவது  போல் செய்துவிட்டனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என கண்டறியப்பட்டு அந்த 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement