தொங்கு பாலம் விழுந்து விபத்து: 12 பேரை பறி கொடுத்த சோகத்தில் பா.ஜனதா எம்.பி..!

தொங்கு பாலம் விழுந்து விபத்து: 12 பேரை பறி கொடுத்த சோகத்தில் பா.ஜனதா எம்.பி..!


12 people lost their lives in the suspension bridge collapse tragedy, BJP MP

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100 க்கும் மேல் இருக்கலாம் என்று அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பியின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அடக்கம் என்று கூறப்படுகிறது.

100 ஆண்டுகல் பழமையான தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிந்து பாலம் சீரமைக்கப்பட்டதை அடுத்து, குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26 ஆம் தேதி அந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் மீண்டும் திறக்கப்பட்ட தொங்கு பாலத்தை பார்வையிட திரண்டிருந்தனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் அவர்களது எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது.

இதனை தொடர்ந்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களில் ராஜ்கோட் தொகுதி பா.ஜனதா எம்.பியான மோகன்பாய் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 12 பேர் அடக்கம் என்றும், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மோகன் பாய் கூறுகையில்,  ஐந்து குழந்தைகள் உட்பட எனது மற்றும் எனது தங்கையின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை இழந்துவிட்டேன். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம். இதன் காரணமாக மிகுந்த மனவருத்தத்தில் உள்ளேன். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.