கேரளாவில் மீண்டும் பரவ தொடங்கிய கொரோனோ! இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!12 members affected by the corona in kerala

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்நோயானது இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் முதலில் கேரளாவில் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அம்மாநில அரசின் அதிரடியான செயலால் பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

KERALA

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் 4 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும், 8 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மொத்தமாக கேரளாவில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 642 ஆக உள்ளது. மேலும் தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 124 ஆக உள்ளது.