ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் 11 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! 12 வதாக பிறந்தது என்ன குழந்தை தெரியுமா?

ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் 11 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்! 12 வதாக பிறந்தது என்ன குழந்தை தெரியுமா?


11 girl child rajasthan

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள ஜாத்சர் நகரை சேர்ந்தவர் கதி என்ற பெண். இவருக்கு தற்போது 42 வயதாகிறது. இவருக்கும் இவரது கணவருக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது தான் ஆசையாக இருந்துள்ளது. 

ஆனால் ஒவ்வொரு முறை கருவுறும் போது ஆசையாக இருப்பார்கள். ஆனால் அவர்களது ஆசை நிறைவேறாமல் போகவே பெண் குழந்தைகளே பிறந்துள்ளது.இவ்வாறாக கதிக்கு தொடர்ந்து 11 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. 

rajasthan

இதனை அடுத்து தனது ஆசை நிறைவேறும் என்ற எண்ணத்தில் 12 வது முறையாக கருவுற்றுள்ளார் கதி. ஆனால் இவரின் முத்த பெண் குழந்தைகள் இருவருக்கு திருமணம் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் 12 வது குழந்தையின் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கதிக்கு இந்த முறை மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதாவது இந்த முறை அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.