அதிர்ச்சி! தலைவலியால் துடித்த சிறுமியின் மூளைக்குள் என்ன இருந்தது தெரியுமா? மருத்துவர்கள் ஷாக்!
டெல்லியில் வசித்து வரும் லீமா என்ற 8 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அவரது பெற்றோர்கள் இது குறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்த நிலையில் லீமாவின் தலையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அற்றகாக லீமா ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொண்டு வருவதால் அவரது உடல் எடை அதிகரித்துள்ளது. மேலும் இதனால் அவருக்கு நடப்பது மற்றும் மூச்சு விடுவது மிகவும் கடினமாக இருந்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடுமையான தலைவலி குறையாத நிலையில் லீமாவின் தலையில் சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டுள்ளது. அப்பொழுது லீமா நியூரோ சிஸ்டிக் சிரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் லீமாவின் மூளைக்குள் நூற்றுக்கணக்கான வெள்ளை நிற நாடா புழுக்களின் முட்டைகள் இருப்பதும் தெரியவந்தது.
மூளையில் உள்ள நாடாப்புழுக்கள் கொடுத்த அழுத்தத்தினால் மூளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதலில் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மூளையில் உள்ள நாடாப்புழுக்களின் முட்டையை அழிப்பதற்கு மருந்து கொடுப்பது வலிப்பு போன்ற பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவர்கள் மெதுவாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் காய்கறி மாமிசம் மற்றும் முட்டைகளை சரியாக வேகவைக்காமல் சாப்பிடுவதால் உடலில் புழுக்கள் உற்பத்தியாகிறது எனவும்,வேகவைக்காத உணவிலுள்ள லார்வாக்கள் நாடாப்புழுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.