இந்தியா

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரன்.! தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம்.!

Summary:

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்க

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 9ஆம் தேதி 6 வயதான சிறுமியை பள்ளிகொண்டா ராஜூ என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர் பிடிபடாததால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில், அந்த குற்றவாளி  வயதை நெருங்கியவர் என்றும், அந்த குற்றவாளியின் உயரம் தோராயமாக 5.9 அடி இருக்கும் என்றும், அந்த குற்றவாளி தனது இரு கைகளிலும் மவுனிகா என பச்சை(Tattoos) குத்தியிருப்பான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த குற்றவாளி குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


Advertisement