ரயிலில் கேட்க ஆள் இல்லாமல் கிடந்த மர்ம பை.. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட


1-crore-40-lacks-unclaimed-money-found-in-train

ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த சிறப்பு ரயில் ஒன்றில், சந்தேகப்படும் விதமாக பை ஒன்று கிடப்பதாகவும், அந்த பைக்கு யாரும் உரிமை கோரவில்லை என்பதால், அந்த பை குறித்து சோதிக்குமாறு ரயில்வே ஊழியர் ஒருவர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த மர்ம பையை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த பையை திறந்து பார்த்தபோது, பைக்குள் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து பையில் இருந்த பணத்தை எண்ணி பார்த்தபோது, அதில் மொத்தம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

அந்த பைக்கு உரிமையாளர் யார்? அந்த பை அங்கு எப்படி வந்தது? என அதிகாரிகள் விசாரித்துவரும்நிலையில், தற்போது அந்த பை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.