AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கீரை சாப்பிட போறீங்களா.? உஷார்.!
பொதுவாக கீரை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தக்கூடிய செயல் என்றாலும் அத்தகைய நன்மையை தரும் கீரையை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்ற சில விதிமுறைகள் இருக்கின்றன. இவற்றை மீறி நாம் சாப்பிடும் போது உடலுக்கு தேவையற்ற உபாதைகள் ஏற்படக்கூடும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அகத்திக்கீரை மற்றும் சிறுகீரை உள்ளிட்டவற்றை எல்லா நாட்களிலும் நாம் சாப்பிட முடியாது. நோய் வாய்ப்பட்டு இருக்கும் போது மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் இந்த கீரைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை மருந்தின் வீரியத்தை முறிக்கின்றன.

முருங்கைக் கீரை சாப்பிடும் போது அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
சிறுகீரை சமைக்கும் போது அத்துடன் பெருங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சேர்த்து சமைக்க கூடாது.
பருப்பு கீரை உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடியது. இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் கிருமி தொற்று ஏற்படும்.
இதையும் படிங்க: சளி பிடித்தால், இலந்தை பழம் சாப்பிடக்கூடாதா.? உண்மை என்ன.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
மூல நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் நபர்கள் அரை கீரையை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
அகத்திக் கீரையை சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இல்லை எனில் வயிற்று உபாதைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: பழம் நல்லது தான்.. ஆனா அதை இப்டி சாப்பிட்டா அது ஆபத்தை தரும்.. உஷார்.!