பழம் நல்லது தான்.. ஆனா அதை இப்டி சாப்பிட்டா அது ஆபத்தை தரும்.. உஷார்.!

உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் பழங்களில் இருக்கின்றன. ஆனால், அந்த பழங்களை நாம் இரவு நேரங்களில் எடுத்துக் கொண்டால் நமக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும். தூங்குவதற்கு முன்பு சில பழங்களை எல்லாம் நாம் எக்காரணத்தை கொண்டும் சாப்பிடவே கூடாது. அந்த பழங்கள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் சர்க்கரை மிகவும் அதிகமாக இருக்கும். இரவு தூங்குவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படுவதன் மூலம் தூக்க நேரமானது தாமதமாகும்.
கிவி பழத்தில் விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே, இதை சாப்பிட்டால் அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் விரைவில் ஏற்படலாம்.
இதையும் படிங்க: தாம்பத்தியதில் குதிரை பலம்.. இந்த ஒரு பொடி போதும்.! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.!
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து மற்றும் சர்க்கரை மிக அதிகமாக இருக்கிறது. இரவு நேரத்தில் அதை சாப்பிடும் போது ரத்த சர்க்கரை அளவில் அது கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, இது தூக்கத்தை பாதிக்கும்.
அன்னாசி பணத்தை இரவில் சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்படும். இதில் புரோமெலைன் என்னும் என்சைம் உள்ளது தான் அதற்கு காரணம்.
தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து மிக அதிகமாக இருக்கிறது. இதில் இருக்கும் டையூரிக் அமிலத்தினால் இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். இது தூக்கத்தை பாதிக்கலாம்.