தாம்பத்தியதில் குதிரை பலம்.. இந்த ஒரு பொடி போதும்.! நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.!



healthy-remedies-for-increasing-immunity

தற்போதுள்ள காலகட்டத்தில் பல நவீனமான மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்தில் கூட நம் முன்னோர்கள்  நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் உண்ட உணவு தான். முன்னோர்கள் உண்ட பல உணவுகளில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டதாலும், அவை நோயை எளிதில் குணப்படுத்தியதாலும் நோயற்ற வாழ்வை வாழ்ந்தனர். இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய நாட்டு மருந்துகளை குறித்து இப்பதிவில் விளக்கமாக காணலாம்.

1. கடுக்காய் பொடி - தினமும் காலையில் சுடு தண்ணீரில் ஒரு சிட்டிகை கலந்து குடித்தால் வாய்ப்புண், குடல் புண் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்வதற்கு பயன்படுகிறது. 

இதையும் படிங்க: குளிர்கால சளி, காய்ச்சலால் அவதிப்படுறீங்களா.? இந்த கசாயத்தை குடித்து பாருங்க.!?

2. நெல்லிக்காய் பொடி - வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை பொடியாக எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு எலும்பு மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

3. வில்வ பொடி - உயர் ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் ஒரு ஸ்பூன் வில்வ பொடியை கலந்து குடித்து வரலாம்.

4.  அமுக்குரான் கிழங்கு பொடி மற்றும் ஓரிதழ் தாமரை பொடி - தாம்பத்திய உறவில் நிலைத்து நிற்கவும், ஆண்மை அதிகரிக்கவும் இதை பயன்படுத்தலாம்.

Health

5. சிறுகுறிஞன் பொடி, நாவல் பொடி - சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக இருந்து வருகிறது.

6. வல்லாரை பொடி - குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் வல்லாரை பொடியை தினமும் பாலில் கலந்து கொடுத்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்.

7. தூதுவளை மற்றும் துளசி பொடி - குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் நாள்பட்ட சளி போன்றவற்றை சரி செய்கிறது.

8. நாயுருவி பொடி - உள், வெளி மூலத்திற்கு சிறந்தது மற்றும் பற்களை வலிமையாக்குவதோடு பளபளக்கச் செய்யும்.

9. திரிபலா பொடி -  வயிற்று புண் மற்றும் குடல் நோய்களை குணப்படுத்தும்.

10. அதிமதுரம் பொடி - தொண்டை கரகரப்பு, இருமல், நெஞ்சு சளி, வயிறு உப்புசம் போன்றவற்றை குணப்படுத்தும். இது போன்ற நாட்டு மருந்துகளை அன்றாட உணவில் ஒரு பகுதியாக சேர்த்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழலாம்.

இதையும் படிங்க: 60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?