கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து.! ஆய்வில் வெளிவந்த தகவல்.!



Risk of heart attack within 2 weeks of corona attack

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக "தி லேன்செட்" பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றிய ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு ஆராய்ச்சியாளர் காட்சூலாரிஸ் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடுமையான இதய பாதிப்புடன் ஆபத்தில் இருக்கின்ற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம்” என தெரிவித்துள்ளார்.