சிம்பிளான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரை கடையல்.! ஈஸியான ரெசிபி..!!

சிம்பிளான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக் கீரை கடையல்.! ஈஸியான ரெசிபி..!!


moringa-leaves-kadayal-simple-and-healthy-recipe

முருங்கை கீரை கர்ப்பிணி பெண்களுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒன்றாகும். இவற்றில் அதிகமாக இருக்கும் இரும்புச்சத்து குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க வழி வகுக்கிறது. மேலும்  மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்றுப்புண், வயிற்று வலி ஆகியவை குணமாகும். மேலும் முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே பயனளிப்பவை. முருங்கைக்காய், பூ என அனைத்தையும் சாப்பிடலாம். அதனால் ஆரோக்கியமும் பெருகும். மேலும் இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து குழந்தைகள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தனை நற்குணங்கள் கொண்ட முருங்கைக்கீரை கடையல் செஞ்சு பாருங்க. எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க அது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை கடையல் செய்வதற்கு பருப்பு 1/2 கப், பூண்டு 10 பல், ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நன்றாக தட்டியது, 1 தக்காளி, முருங்கைக் கீரை 2 கப் மற்றும் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

கடையலை தாளிப்பதற்கு:

கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் சிறிது, உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், சோம்பு 1/4ஸ்பூன், வர மிளகாய் 2 ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை:
முதலில் குக்கரில் பருப்பு, தக்காளி, பூண்டு, பெருங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

Moringa Leavesஅதில் முருங்கைகீரையை ஆய்ந்து நன்றாக கழுவி இதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ள வேண்டும்.
பின்னர் இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து மத்து வைத்து ஒன்றிரண்டாக கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அருமையான முருங்கைக் கீரை கடையல் ரெடி.

Moringa Leavesசூடான சாதத்துடன் அரை ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையும் ஆரோக்கியத்துடன், சுவையான சாப்பாடு கிடைக்கும். முருங்கை கீரையை சாப்பிட யோசிக்கும் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் என்று கூறி சாப்பிட வைத்துவிடலாம். முருங்கக்கீரையில் உள்ள சத்துக்களும் குழந்தைகளுக்கு எளிதாக கிடைத்துவிடும்.