நாவில் எச்சில் ஊறவைக்கும் வெற்றிலை துவையல்.. வீட்டிலேயே சுவையாக செய்து அசத்துங்கள்..!!

நாவில் எச்சில் ஊறவைக்கும் வெற்றிலை துவையல்.. வீட்டிலேயே சுவையாக செய்து அசத்துங்கள்..!!


How to Prepare Vetrilai Thuvayal

 

இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாகவும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் வெற்றிலையில் சட்டினி செய்வது எப்படி என்பது குறித்து இன்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

★வெற்றிலை - 20 
★காய்ந்த மிளகாய் - ஐந்து 
★வெங்காயம் - இரண்டு 
★தேங்காய் துருவல் - சிறிதளவு 
★பூண்டு பல் - நான்கு 
★புளி- சிறிதளவு 
★உளுந்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் 
★கடுகு - அரை ஸ்பூன் ★பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் ★எண்ணெய் - சிறிதளவு 
★உப்பு - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட வெற்றிலையில் காம்பு, நடுநரம்பினை நீக்கி பின்னர் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

★வெங்காயம், பூண்டு போன்றவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

★வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து இதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு, தேங்காய் துருவல் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். 

★இறுதியாக வெற்றிலையை சேர்த்து நன்றாக வதங்கியதும் புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து தாளித்து பரிமாறினால் சுவையான சத்து மிகுந்த வெற்றிலை துவையல் தயார்.