முத்துபோன்ற பற்களை பெற இயற்கையான வழிமுறைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல்கள்.!
முத்துபோன்ற பற்களை பெற இயற்கையான வழிமுறைகள் என்னென்ன?.. அசத்தல் தகவல்கள்.!

நமது பற்கள் முதலில் வெண்மை நிறத்துடன் இருந்தாலும், அதனை சரியாக பராமரிக்காத பட்சத்தில் நிறம் மாற்றமடையும். மேலும், பிற பற்கள் தொடர்பான பிரச்சனையும் அடுத்தடுத்து ஏற்படும். அந்த வகையில், நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களை வைத்து பற்களின் நிறத்தை தக்கவைப்பது எப்படி என இன்று காணலாம்.
வாழைப்பழத்தோல்:
வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அதன் தோள்களுக்கு பற்களை வெண்மையாக்கும் குணம் உள்ளது. தினமும் 2 முறை வாழைப்பழத்தோலினை பற்களில் தேய்த்து வந்தால், அதில் உள்ள பொட்டாசியம், மாக்னீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உருய்ஞ்சப்பட்டு, பற்களுக்கு வெண்மை நிறம் கிடைக்கும். இதனைப்போல ஆரஞ்சு பழத்தின் தோலையும் பற்களில் தேய்க்கலாம்.
ஸ்டராபெர்ரி:
சிவப்பு நிறத்துடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஸ்டராபெர்ரி, பற்களை வெண்மையாக்கும் குணம் கொண்டது. தினமும் காலையில் எழுந்ததும் ஸ்டராபெர்ரியை இரண்டாக வெட்டி, அதன் சாறினை பற்கள் மற்றும் இருக்களில் 2 நிமிடம் தடவி மசாஜ் செய்யலாம். ஸ்டராபெர்ரியில் இருக்கும் மாலிக் அமிலம், பற்களை வெண்மையாக்கும். அதன் நார்சத்து இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். வாய் மற்றும் பற்களில் இருக்கும் பாக்டீரியாவை நீக்கும்.
கேரட்:
தினமும் ஒரு கேரட்டை நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால், அது பற்களுக்கு நலம் சேர்க்கும். கேரட் பற்களில் இருக்கும் பிளேக் எனப்படும் பாக்டீரியாவை வெளியேற்றி நமது உடல்நலத்தை பாதுகாக்கிறது. கேரட்டின் நடுப்பகுதியை வைத்து பற்கள் தேய்த்து வர, பற்கள் பிரகாசமாகும். ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
புகை பற்களுக்கும் எமன்:
உடல்நலனை சீரழிப்பதில் மிகமுக்கிய பங்கு புகைப்பழக்கத்திற்கு உண்டு. இது தன்னை உட்கொள்பவர் மட்டுமல்லாது, அதனை உட்கொள்ளாதவரையும் தேடி தாக்கும். புகைப்பழக்கத்தை தொடர்ந்து வைத்திருந்தால், உடல்நல பாதிப்போடு பற்களின் நிறமும் மஞ்சளாக மாறும். பற்களின் மீது கவனம் செலுத்துபவர்கள் புகை பிடிக்காமல் இருப்பது நல்லது.