மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மை பெறுக, சர்க்கரை நோய் குறைய! இயற்கை தந்த அருமையான மருந்து!

Summary:

Home remedies for sugar in tamil

டெக்னாலஜி வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றம் என்ற பெயரில் மனிதனின் அன்றாட வாழ்க்கைமுறை மிகவும் மாறிவிட்டது. கண்டநேரத்தில் சாப்பிடுவது, கண்டதை சாப்பிடுவதால் தேவை இல்லாத வியாதிகள் மனிதனை தொற்றிக்கொள்கிறது. இதுபோன்ற வியாதிகளுக்கு மருத்துவமனை சென்று ஆயிர கணக்கில் செலவழிப்பதை விட இயற்கையே நமக்கு தீர்வை தருகிறது.

இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் ஓன்று வெந்தய கீரை. இந்த வெந்தய கீரை நம் உடலில் இருக்கும் பல்வேறு வியாதிகளை குணமாக உதவுகிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வெந்தய இலைகளை எடுத்துக்கொள்வதால், செரிமானம் மிக சிறப்பாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, புரோட்டின் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இன்று நாட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு வியாதி சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தேவையான இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவி செய்கிறது.

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகள் உருவாக்க இந்த வெந்தய கீரை பயன்படுகிறது. தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் வெந்தய கீரை சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். மலசிக்கல் வாயு தொல்லை, வயிற்றுப்புண் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் மிக விரைவாக நன்றாகி விடும்.

நம் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதே போன்று, ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்கிறது வெந்தய கீரை. வெந்தய கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு இதயநோய் வராமல் தடுக்க முடியும்.


Advertisement