மகாநதி சீரியலில் விஜய் காவிரிக்கு பிறந்த விடிவு காலம்! காவேரியின் சத்தியமும், வெண்ணிலாவின் முடிவையும் பாருங்க!



mahanadhi-serial-vijay-kaveri-vennila-twist

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் விஜயை வெளியே கொண்டு வர குமரன் மற்றும் காவேரி சேர்ந்து முயற்சி செய்கிறார்கள். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகளில், குமரன் வெண்ணிலாவின் மாமாவை சந்திக்க அவருடைய ஊருக்கே செல்கிறார்.

வெண்ணிலாவை சந்தித்த காவேரி

ஹாஸ்பிடலில் உள்ள வெண்ணிலாவிடம், பசுபதி தான் மொட்டை மாடியில் இருந்து தள்ளியதாக கூறும் உண்மையை சொல்ல காவேரி பலவிதமாக கேட்டு அணுகுகிறார். ஆனால் வெண்ணிலா, "விஜயை எனக்கு விட்டுக் கொடுக்கிறாயா?" என பதிலளிக்கிறார்.

விஜய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காவேரி வெண்ணிலாவிடம் காலில் விழுந்து கெஞ்சுகிறார். வெண்ணிலா தயக்கம் காட்ட, காவேரி தனது கர்ப்பம் பற்றி கூறி, குழந்தை மீது சத்தியம் செய்து விஜயை விட்டுவிடுவதாக உறுதி செய்கிறார்.

இதையும் படிங்க: மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...

வெண்ணிலாவின் முடிவும் பயணமும்

இதனால் வெண்ணிலா உண்மையை சொல்ல முடிவு செய்கிறாள். பின்னர், காவேரி மற்றும் விஜயை சேர்த்து வைத்துவிட்டு, வெண்ணிலா மாமாவுடன் ஊருக்கு புறப்படும் வகையில் கதை நகர்கிறது. பசுபதியும் தன்னுடைய குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்ல நேரிடும்.

விஜய்-காவேரிக்கு புதிய வாழ்வு

இந்நிலையில் சாரதா காவேரியின் கர்ப்பம் பற்றிய உண்மையை அறிந்து, எந்த எதிர்ப்பும் இல்லாமல் விஜயை வாழ வைக்க திட்டமிடுகிறார். இப்போது விஜய்-காவேரி வாழ்க்கை புதிய தொடக்கம் பெற உள்ளது.

 

 

இதையும் படிங்க: மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....