நள்ளிரவில் நடக்கும் சம்பவங்கள்.. ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பித்தவருக்கு இப்படி ஒரு சோதனையா?



air-india-plane-crash-survivor-viswas-shock

லண்டனை நோக்கி கடந்த மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான விமான விபத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர் என்பதையும், அது நாட்டெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பதையும் மறக்க முடியாது.

விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். பயங்கர கனவுகள், நள்ளிரவில் திடீரென எழுதல், தூக்கம் இழத்தல் போன்ற அழுத்தமான மனநிலைகள் தொடர்ச்சியாக அவரை வாட்டி வருகிறது.

அவருடன் பயணித்த மற்றொரு சகோதரர் உயிரிழந்ததின் துயரம் மற்றும் விமானம் விபத்திலிருந்து தப்பிய அதிர்ச்சி, விஸ்வாஸை இன்னும் சீராக வாழ விடாமல் வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்கள் அவரது நிலையை பற்றிச் சொல்வதற்கே பயப்படுவதாகவும், யாரிடமும் பேச முடியாமல் தவிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கட்டிய உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக எகிறி குதித்து ஓடும் இளம் பெண்..! வைரல் வீடியோ.

அவரது மனநிலையை பார்த்த சில மருத்துவ நிபுணர்கள், இது ஒரு வகை மனஅழுத்தம் எனக் கூறி, அவருக்கு சிகிச்சை தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்ததாக கூறிய டாக்டர்! மறுநாள் உயிர் பிழைத்த அதிசய குழந்தை! அதிர்ச்சி சம்பவம்....