சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா.? இதோ எளிமையான வீட்டு வைத்தியம்.!

சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா.? இதோ எளிமையான வீட்டு வைத்தியம்.!



here-is-the-home-remedy-for-sinus-issue

அனைத்து வயதினருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ள பொதுவான பிரச்னைகளில் ஒன்று சைனசைடிஸ். பொதுவாக சைனஸ் பிரச்சனை என்று இது குறிப்பிடப்பட்டாலும் புரையழற்சி (Sinusitis) அல்லது சைனஸ் தொற்றுநோய் அல்லது நாசிப்புரையழற்சி என்றும் இது அறியப்படுகிறது. 

இந்த சிக்கல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குளிர் மற்றும் பனிக்காலம் வந்தாலே சிலர் தொடர் தலைவலி மற்றும் தும்மலால் கடுமையாக அவதிப்படுவார்கள். 

health tipsஅதே போல தூசுக்கள் இருக்கும் ஏரியாவிற்கு சென்றால் விடாமல் தும்மி கொண்டே இருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் சைனஸ் பிரச்னையாக தான் இருக்கும். இரவு நேரத்தில் அதிக தொந்தரவாக இருப்பின் கீழ சொல்றத செஞ்சு பாருங்க. கண்டிப்பா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

health tipsஒரு கிளாஸ் தண்ணீர்ல ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்க்கும் குறைவா மிளகு தூள் போட்டு  நல்லா கொதிக்க விட்டு அதோட  எசன்ஸ் இறங்கியதும் சூடு ஆற விட வேண்டும். பின்னர் சுத்தமான மலை தேன் 1 ஸ்பூன் விட்டு குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.