மருத்துவம் லைப் ஸ்டைல்

தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ்! இந்த சமயத்தில் நாம் எதுபோன்ற உணவுகளை சாப்பிடவேண்டும்?

Summary:

healthy food for avoid corona

சீனாவில் ஆரம்பித்த கொரோனோ வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க உலக அளவில் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10000ஆக அதிகரித்துள்ளது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்களும் வெளிப்பயணகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பொதுமக்கள் தான் ஒத்துழைக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் பொதுமக்கள் சத்துள்ள, உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டியது அவசியம். பழங்கள், கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொண்டு அசைவ உனைவை சற்று குறைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் கடையில் சாப்பிடுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நமது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் தான் கொரோனா வைரஸ் நம் உடலை தாக்காது. எனவே இந்த சமயத்தில் உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்துங்கள். 


Advertisement