இது சூப்பர்.. "உடல் பருமன் முதல் எலும்புகள் உறுதி வரை.." கொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.!

இது சூப்பர்.. "உடல் பருமன் முதல் எலும்புகள் உறுதி வரை.." கொள்ளு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா.!


healthy-benefits-of-horse-gram

'இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழி நாம் அறிந்ததே! கொள்ளு ஒரு பயறு வகை ஆகும். பொதுவாக குதிரைக்கு உணவாக இதனைக் கொடுப்பார்கள். குதிரை நீண்ட நேரம் வேகமாக ஓடுவதற்கு உண்டான ஆற்றலை கொள்ளு தருவதால் இதனை உணவாக அளித்து வந்தனர்.

உடல் பருமன் குறைய கொள்ளு உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் உரம் தரக்கூடியது கொள்ளு. உடம்பில் இருக்கும் ஊளை சதையை குறைப்பதோடு, தேவையற்ற கொழுப்பையும் கரைக்கிறது. கடுமையான உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் உடல் அழற்சியையும் போக்கும்.

Horse Gramபுரதச்சத்து, மாவுச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து மிகுதியாக இதில் உள்ளது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும் போது சிறுநீரகத்தில் கற்கள் சேராமல் தடுக்கிறது. ஜலதோஷம், இருமல், உடல் வலி, உடல் சோர்வு ஆகியவற்றிற்கும் தீர்வாக அமைகிறது. வாயு பிரச்சனைகளை தீர்க்கிறது.

Horse Gramகொள்ளு பருப்பை நீரில் ஊறவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால், நமது உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொள்ளு பருப்பை ரசமாக செய்தும், கொள்ளுடன் பூண்டு, சீரகம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்து, கடைந்தும் உண்ணலாம். சிலர் இதில் சூப் செய்வதும் உண்டு.