அதியமான் ஔவைக்கு கொடுத்த அதிசய கனி...! நெல்லிக்கனியின் நன்மைகளை தெரிஞ்க்கோங்க.. அசந்துபோவீங்க..!

அதியமான் ஔவைக்கு கொடுத்த அதிசய கனி...! நெல்லிக்கனியின் நன்மைகளை தெரிஞ்க்கோங்க.. அசந்துபோவீங்க..!



gooseberry-is-a-miracle-fruit

அதிசய பலன் தரும் நெல்லிக்கனி இது நம்ம ஊர்களில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புத கனி எளிமையாக கிடைப்பதால் நாம் இதை அதிகமாக கண்டுகொள்வதில்லை.

நெல்லிக்காயில் வைட்டமின்-சி அதிகமாக உள்ளது. வைட்டமின்-சி அதிகமாக உள்ளதால் இது நமது ஆயுளை நீடிக்க செய்ய உதவுகிறது. வைட்டமின்-சி மற்றும் ஏ உணவுடன் எடுத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைவு என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு 40 சதவீதம் மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது என்றும் ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் வைட்டமின்-சி நம் உடலுக்கு போதுமானது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நம்மூரில் சாதாரணமாக கிடைக்கும் நெல்லிக்காயில்  வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால் நாம் மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ வழி  வகுக்கும். மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் மினரல்ஸ் ஆன்டி ஆக்சிடென்ட் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காயை நாம் உட்கொள்ளும் போது நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. சர்க்கரையை குறைக்கின்றது மற்றும் உடம்பில் உள்ள கொழுப்பை குறைக்கின்றது. நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அதிகப்படுத்துகிறது.

சளி இரும்பல் போன்றவற்றை குணப்படுத்த தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காய் நமது இளமையை சீராக வைத்திருக்கவும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகவும் உதவுகிறது. விலை அதிகமுள்ள பழங்களை வாங்கி சாப்பிடுவதை விட தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லது. தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கக்கூடிய மலிவான கனி நெல்லிக்கனி. ஏழைகளுக்கான ஆப்பிள் என்றும் நெல்லிக்கனியை கூறுவர்.