கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா.? சிம்பிளான இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க.!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் இருக்கும் தவறான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொழுப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு பக்கவாதம் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தக் கெட்ட கொழுப்புகளை இயற்கையான முறையில் நம் உடலில் இருந்து நீக்குவதற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இந்த சட்னி செய்வதற்கு நெல்லிக்காய் 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் பூண்டு பல் 3-4 எடுத்துக்கொள்ள வேண்டும். இதோடு பச்சை கொத்தமல்லி 100 கிராம், 1/2 டீஸ்பூன் சீரகம், 2-3 பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் நெல்லிக்காயை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதன் பிறகு கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றையும் நன்றாக கழுவிக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய் பூண்டு பல் பச்சை மிளகாய் கொத்தமல்லி 1/2 டீஸ்பூன் சீரகம் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். சுவையான மற்றும் சத்து நிறைந்த சட்னி ரெடி.
நம் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதற்கு இந்த சட்னியை உட்கொள்ளலாம் எனினும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக அமையும்.