முளைத்த பூண்டை சாப்பிடலாமா?? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ...

முளைத்த பூண்டை சாப்பிடலாமா?? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ...



garlic-tips

பூண்டை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்து இருக்க ஒரு சில  டிப்ஸ்! 

1. பொதுவாக பூண்டை நல்ல காற்றோட்டத்துடன் கூடிய உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

2. பூண்டை சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து தவிர்த்து  வைக்க  வேண்டும்.

3. பூண்டின் காம்புகளை அகற்றாமல் பூண்டை ஒரு பேப்பரில் இறுக்கமாக கட்டி அறை வெப்பநிலையில் உள்ள அறையில் வைத்தால் பூண்டு ஆறு மாதங்கள் வரை கூட கெடாமல் அப்படியே இருக்கும் 

4.  பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க  கூடாது.

5. அப்படி பிரிட்ஜில் பூண்டை வைப்பதால் அதன் சுவை சிதைக்கப்படுவதோடு, பூண்டு முளைவிடத் துவங்கி விடும். மேலும் பூண்டில் உள்ள மூலக்கூறுகள் மாறிவிடும்.

6. பூண்டின் காம்புகளை நீக்கினால் அதில் அதிக காற்று பட்டு அவை சுருங்க ஆரம்பித்து விடும்.

​முளைத்த பூண்டை உணவில் சேர்க்கலாமா? 

சிலரது வீடுகளில் பூண்டு வாங்கிய சில நாட்களிலேயே முளைத்து விடும். அப்படி முளைத்த பூண்டை உணவில் பயன்படுத்தலாமா என்ற குழப்பம் இனி வேண்டாம். முளைத்த  பூண்டை உணவில் சேர்க்கலாம். பூண்டு எவ்வளவு நீளமாக முளைத்து வருகிறதோ, அந்த அளவு பூண்டில் அதன் சுவை குறைவாக இருக்கும். எனவே முளைத்த பூண்டை விரைவில் பயன்படுத்தி விடுவது நல்லது.