மக்களே உஷார்.! கோடை காலத்தில் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று.! தற்காத்துக் கொள்வது எப்படி.?

மக்களே உஷார்.! கோடை காலத்தில் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று.! தற்காத்துக் கொள்வது எப்படி.?



during-summer-how-to-prevent-ourself-from-urinal-tracti

இந்தியா முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடை காலங்களில் மக்களை தாக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றாகும். யூரினரி டிராக் இன்ஃபெக்சன்(UTI) என இது ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இளம் வயது முதல் முதியவர்கள் வரை கோடை காலத்தில் இந்தத் தொற்றினால் சிரமங்களுக்கு ஆளாவார்கள்.

உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும் கோடை காலங்களில் இந்தத் தொற்று ஏற்படுகிறது. கோடை காலத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பம்  கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையில் வளர காரணமாக அமைகின்றன. கோடை காலத்தில் இந்த சிறுநீர் தொற்று உபாதையில் இருந்து நம்மை  காத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

health tipsசிறுநீர் பாதை தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு உடலை நீரேற்றுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி வெளியே சென்று வருபவர்களாக இருந்தால் அதிகமான அளவு நீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர்  தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் அதிக நீர் சத்துக்களை உள்ளடக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும் . வெள்ளரிக்காய் தர்பூசணி முலாம்பழம் பீர்க்கங்காய் மற்றும் சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து கோடை காலங்களில் நம்மை காத்துக் கொள்ளலாம்.

health tipsசிறுநீரை தேங்க விடாமல் அடிக்கடி வெளியேற்றுவது இந்த நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்குரிய மற்றொரு சிறந்த வழியாகும். சிறுநீர்ப்பையில் அதிக அளவு சிறுநீர் தேங்கி இருக்கும் போது அதில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போது சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ளலாம். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் அந்தரங்கப் பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் கிருமி தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.