கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
அச்சச்சோ.. காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்?.. உஷாரா இருங்க..! இதயநோய் வருமாம்..!!

இன்றுள்ள பலரும் வேலைப்பளுவின் காரணமாக காலை நேர உணவுகளை தவிர்ப்பதை வாடிக்கையாக்கி வருகிறோம். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலக பணிகளில் ஈடுபடுபவோர் என ஒவ்வொருவரும் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளதால் காலை உணவு தெரிந்தும், தெரியாமலும் தவிர்க்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் காலை உணவை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்று அதிர்ச்சி தகவலானது தெரியவந்துள்ளது. மேலும், இதனால் உடலுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போகின்றன. இது பிற்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
காலை உணவை தவிர்ப்பது, விரதம் இருப்பது போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்பதை பலரும் புரிந்து கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வேலையாக இருந்தாலும் காலை நேரத்தில் ஒரு சிற்றுண்டி அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகின்றனர்.