மக்களே உஷார்.. சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பிங்களா?.. இனி அப்படி செய்யாதீங்க..!Don't drink water eating food

பலருக்கும் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். சிலர் உணவை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காகவே அதிகமாக தண்ணீர் குடிப்பர். ஆனால் உணவிற்கு இடையே தண்ணீர் குடிப்பது சரியா என்றால்?, அது செரிமானத்தை தாமதப்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவானது வயிற்றுக்குள் செல்லும்போதே செரிமானம் தொடங்க ஆரம்பிக்கிறது.மேலும் வயிற்றில் உள்ள நொதிகள் உணவை உடைக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் உணவு சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பதால் இந்த செரிமான முறை தடை செய்யப்படுகிறது. 

உணவு சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும் அதிகளவு தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், குமட்டல், ஏப்பம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கும், செரிமான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன.

health tips

உணவுக்கிடையில் தண்ணீர் குடிப்பதை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்சுலின் அளவானது அதிகரிக்கும் :

உணவுடன் சேர்த்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இதனால் உடலில் அதிக கொழுப்பு சேர்கிறது.

நன்றாக மென்று விழுங்க வேண்டும் :

நாம் எந்த அளவிற்கு மென்று சாப்பிடுகிறோமா அதே அளவிற்கு செரிமானம் வேகமாக நடக்கிறது. இதனால் வயிறு உப்புதல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

எடை அதிகரிப்பு :

உணவுக்கிடையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் செரிக்காத உணவுகள் தான் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

health tips

நொதிகளுக்கிடையே தண்ணீர் குறுக்கிடுகிறது :

உணவுடன் சேர்த்து தண்ணீர் குடிப்பது, நொதிகளின் உதவியுடன் உணவை உடைக்க உதவும் வயிற்று அமிலத்தை நீர்த்து போக செய்கிறது. வயிற்றுக்குள்ளே அதிக நீர் செல்வதால் இந்த நொதிகள் கழுவப்பட்டு இரப்பை குடல் பகுதி சரியாக செயல்படுவதை கடினமாக்குகிறது. இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஏப்பம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

குறைந்த எண்ணெய் மற்றும் காரம் :

உணவில் எப்போதும் காரமும் எண்ணெயும் குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்காகவும் தான். குறைந்த அளவில் எண்ணெய் மட்டும் காரம் சேர்த்துக் கொள்வது தாகத்தை தூண்டாது.

குறைந்த உப்பு சுவை :

குறைந்தளவு உப்பு சுவை உள்ள உணவை எடுத்துக்கொண்டால், உணவுக்கு இடையில் தண்ணீர் அடிக்கடி குடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சோடியம் எப்போதும் தாகத்தை தூண்டக்கூடியது.