குஷியோ குஷி! தமிழக மக்களுக்கு மெகா ஜாக்பட்! பொங்கல் பரிசு ரூ.3000 + ரூ.10,000.... வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு.!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை என்பது மக்களின் வாழ்வியலுடன் இணைந்த ஒரு பெரும் திருவிழாவாகும். அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு – கடந்த ஆண்டுகளின் நிலை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுப்புடன் சேர்த்து ரொக்க பணமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு, நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படவில்லை.
2026 தேர்தலை முன்னிட்டு மாற்றம்?
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் மீண்டும் ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் சமீப காலமாகவே வெளியாகி வருகின்றன. குறிப்பாக பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 முதல் 5000 ரூபாய் வரை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க: புதிய திட்டம்! ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000. தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
NDA தரப்பில் புதிய அறிவிப்பு?
இதற்கிடையில், பீகார் பாணியில் மகளிர் சுயதொழில் மேம்பாட்டிற்காக பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை NDA திட்டம் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் பொங்கல் விழாவில் பங்கேற்கும் போது இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த அறிவிப்புகள், மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதுடன், 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியல் சூழலை மேலும் சூடுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மார்னிங் மகிழ்ச்சி செய்தி! ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு..! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!