வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
தயிரை உண்மையில் எப்படி சாப்பிட வேண்டும்?.. மதிய உணவுக்கு முன் கட்டாயம் செய்ய வேண்டியது இதுதான்.!
நமது இந்திய உணவுகளில் முக்கிய உணவாக தயிர், மோருக்கும் இடம் உண்டு. திருமண நிகழ்ச்சிகளில் கூட நமது முன்னோர்கள் சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, மோர், பாயசம் என்ற வரிசையை அதன் மகத்துவத்தை உணர்ந்து தான் இணைத்து இருக்கிறார்கள்.
அந்த வகையில், தயிர் என்பது பொதுவாக குளிர்ச்சியான பொருள் என்ற விவாதம் நம்மிடையே பரவி காணப்படுகிறது. ஆனால், அது உண்மையில் சூடான ஆகாரம் ஆகும்.
தயிரில் தண்ணீர் ஊற்றி கடைந்து மோராக மாற்றப்படும் போது தான் அது குளிர்ச்சி தன்மையை பெறுகிறது என்பதே நிதர்சனம். மதிய வேளைகளில் உணவு சாப்பிடும் முன்னர் தயிர் சாப்பிட்டால் நன்றாக பசி தூண்டப்படும். செரிமான சக்தி அதிகரிக்கும்.