இந்தியா மருத்துவம்

யாருக்கு போன் செய்தாலும் கொரோனா இருமல் அலர்ட் காலர் டியூன்! அதுல என்ன சொல்லிருக்காங்க?

Summary:

corona virus alert awarness caller tune

சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ்  தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால்  இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மொபைல்போன்களுக்கு காலர் டியூன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையை, சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.இதில், கொரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் மத்திய அரசு சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 01123978046 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் அடிக்கடி கிருமி நாசினிகளை கொண்டு கைகளை நன்கு கழுவ வேண்டும், இருமல், காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது அவசியம். கைகளை கண், வாய் போன்ற இடங்களில் வைக்க கூடாது எனவும், மேலும் சந்தேகங்களுக்கு 01123978046 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாருக்கு போன் செய்தாலும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல்போன்களுக்கு காலர் டியூன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த "காலர் டியூன்" ஆங்கிலத்தில் இருப்பதால் கிராமப்புற மக்களுக்கு, தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு அந்த காலர் டியூன் புரியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே இதனை பகிர்ந்து பிறரையும் பயனடைய செய்வோம்.


 


Advertisement