மகிழ்ச்சியான செய்தி: கொரோனாவை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு!



Corona antibiotics

உலகம் முழுவதும் கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆய்வில் ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

corona

ஐவர்மெக்டின் ஒரு டோஸ் எல்லா வைரஸின் மரபணு பொருட்களை முழுமையாக 48 மணிநேரத்திற்குள் அகற்ற முடியும். 24 மணி நேரத்தில் அதில் குறிப்பிடத்தக்க அளவு குறைவதை உறுதி படுத்தியுள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மருந்து எப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை எனவும்,  ஆனால் ஐவர்மெக்டின் மருந்து வைரஸை அழிப்பதற்காக உயிரணு திறனைக் குறைக்கின்றது எனவும், இந்த மருந்தை எந்த அளவுக்கு மனிதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சரியான அளவை கண்டுபிடிக்க ஆராயப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.