கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? விபரம் இதோ.!



Benefits Of Karivepillai 

 

தினமும் நாம் சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கறிவேப்பில்லை தன்னகத்தே பல நன்மைகளை கொண்டது ஆகும். இதில் இருக்கும் கால்சியம், புரதம், இரும்புசத்து, வைட்டமின் பி1, பி2, வைட்டமின் சி ஆகியவை உடலுக்கு தேவையானவை ஆகும். இதனால் பல உடல்சார்ந்த நோய்கள் சரியாகும்.

நுண்ணுயிர் அலர்ஜி எதிர்ப்புப்பண்பு:

கறிவேப்பிலையில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடண்டுகள் சர்க்கரை நோயெதிர்ப்பு தன்மை கொண்டது ஆகும். நுண்ணுயிர் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் இதனுள் நிறைந்துள்ளன. இரும்புசத்து, போலிக் அமிலம் நிறைந்து காணப்படுவதால் இரத்த சோகை பிரச்சனையும் சரியாகும். 

சட்னி & தோசைப்பொடி வடிவில் செய்து சாப்பிடுங்கள்:

உணவில் சேர்க்கப்படும் கற்பிவேபில்லையை ஒதுக்கி வைப்பவர்களுக்கு, அவர்களுக்கே தெரியாமல் அதனை சட்னி அல்லது தோசைப்பொடி வடிவில் அரைத்துக்கொடுத்தும் சாப்பிட வைக்கலாம். இதனால் பல நன்மைகள் உங்களின் அன்புக்குரியவருக்கு கிடைக்கும்.