அவுரி என்கிற நித்யகல்யாணி: 18 வகையான நச்சுகளை முறிக்கும் இதன் மருத்துவ குணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

அவுரி என்கிற நித்யகல்யாணி: 18 வகையான நச்சுகளை முறிக்கும் இதன் மருத்துவ குணத்தை தெரிஞ்சுக்கலாம் வாங்க..!



Auri is an evergreen that has the power to break down eighteen types of toxins

பதினெட்டு வகையான நச்சுக்களை முறிக்கும் ஆற்றல் கொண்டது அவுரி என்கிற நித்யகல்யாணி.

அவுரி செடியின் இலையைக் குடிநீரில் போட்டுக் குடித்துவந்தால், வாதத்தால் ஏற்படும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மாந்தம், மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள் நீங்கும். தொடர்ந்து குடித்துவந்தாலோ, இலையை வேகவைத்து வதக்கிச் சாப்பிட்டுவந்தாலோ, உடல் பொன்னிறமாகும். வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழியும்.

ஒரு கைப்பிடி அளவு அவுரி இலைகளை எடுத்து, சிறிது மிளகுப் பொடி சேர்த்து, 400 மில்லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து பாதியாகும் வரை காய்ச்சி பின்பு வடிகட்டி, தினமும் இரண்டு வேளை என தொடர்ச்சியாக வாரம் குடித்து வந்தால் ஒவ்வாமை (அலர்ஜி) மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

கீழா நெல்லியை போன்றே அவுரியும் மஞ்சள் காமாலை நோய்க்கு அரு மருந்தாகும். இதன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து அதனைச் சுமார் 200 மில்லி காய்ச்சிய வெள்ளாட்டுப் பாலில் சேர்த்து கலக்கிய பின்பு வடிகட்டி அதிகாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

அவுரி செடியின் வேருடன் யானை நெருஞ்சில் இலைகளை 50-50 அளவு (எடையில்)  எடுத்து, அவற்றை ஒன்றாக வைத்து அரைத்து எலுமிச்சைப் பழம் அளவுக்கு மோரில் கலந்து தினந்தோறும் காலை வேளையில் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பாம்புக்கடிக்கு முதலுதவி அளிக்க கிராமங்களில் இதன் இலைகளை பயன்படுத்துவர். இதன் இலையை பச்சையாக அரைத்து ஒரு நெல்லிக்கனி அளவு உண்ட பின்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் உயிரிழப்பு தவிர்க்கப்படுவதுடன், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.