உணவை நீங்கள் அலுமினிய பாத்திரத்தில் சமைக்கிறீங்களா? ஆபத்து வேண்டாமே.!

உணவை நீங்கள் அலுமினிய பாத்திரத்தில் சமைக்கிறீங்களா? ஆபத்து வேண்டாமே.!



Aluminum vessel Cooking 


நமது வீடுகளில் தினமும் நாம் சமைக்கும் உணவுகளை சில்வர், அலுமினியம் உட்பட பல பாத்திரங்கள் கொண்டு தயார் செய்வோம். கிராமங்களில் இன்றளவும் ஒருசில குழம்புகள் பானைகளில் வைத்து சாப்பிடுவது உண்டு. 

செம்பு பாத்திரங்கள், இரும்பு வானெலிகள் உட்பட பல வகையான பொருட்களில் உணவை சமைக்கலாம். இவற்றில் அலுமினியம் பாத்திரத்தில் சமைப்பது என்பது கொஞ்சம் ஆபத்து நிறைந்ததாகும். 

அலுமினிய பாத்திரத்தில் சமைத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலப்பாதிப்பு ஏற்படும். அதிகளவு அமிலத்தன்மை கொண்டுளல்ல தக்காளி மற்றும் வினிகர் போன்ற பொருட்களை அலுமினிய பாத்திரத்தில் சேர்க்கும்போது வேதியியல் மாற்றம் உண்டாகிறது. 

இந்த உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகின்றன. மேலும் மூளை செயலிழப்பு பிரச்சனையும் உண்டாகலாம்.