ஜூஸ் வாங்கி குடிப்பதுதான் உங்களோட முழுநேர வேலையா? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!
அதிகளவில் கூல்டரிங்ஸ் வாங்கி குடிப்பது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக சர்க்கரை:
இன்றளவில் பலருக்கும் பிடித்த இனிப்பான குளிர்பானம், கிட்டத்தட்ட உடலுக்கு விஷம் போன்றதாகும். கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானத்தில் அதிக சர்க்கரை இருக்கிறது. இது உடலில் கொழுப்பு சேரவும், தேவையில்லாமல் உடல் எடையை அதிகரிக்கவும் முக்கிய காரணமாக அமைகிறது. இந்த இனிப்பு ரத்தத்தின் சர்க்கரை அளவை திடீரென அதிக அளவு உயர்த்தும் தன்மை கொண்டது.
இதையும் படிங்க: இல்லத்தரசிகளே.. டீயை இப்படி குடிப்பீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தவறை திருத்திக்கோங்க.!
ரத்த அழுத்தம்:
இதனால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்பட்டு, டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும். குளிர்பானத்தில் இருக்கும் அமிலம் சர்க்கரை பற்களின் எனாமல் பகுதியை அரித்து, பற்சிதைவை விரைவில் ஏற்படுத்தும். இதனை அதிகமாக உட்கொள்வது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த அழுத்தம், இதயம் சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்படும்.
வயிறு உப்பிசம்:
குளிர்பானத்தில் இருக்கும் பாஸ்போர்ட் அமிலம், சிறுநீரக கற்களை உருவாக்கும். இதனால் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படும். அதிகம் குளிர்ந்த நிலையில் இருக்கும் குளிர்பானங்களை குடிக்கும் போது செரிமான மண்டலத்தின் வெப்பநிலையை சீர்குலைக்க வைத்து, செரிமானத்தை மந்தப்படுத்தும். இதனால் வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
வறட்சி:
கார்பனேற்றம் செய்யப்பட்ட பானத்தில் இருக்கும் பாஸ்போரிக் அமிலம், கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும், இதனால் எலும்பு பலவீனமாகும். குளிர்பானத்தில் இருக்கும் குளிர், தாகத்தை தணிப்பது போல தோன்றினாலும், உடலை விரைவில் வறட்சியடைய செய்யும். அதிகப்படியான சர்க்கரை கல்லீரலில் படிந்து பேட்டி லிவர் என்ற பிரச்சனையை உண்டாக்கும்.
சில குளிர்பானத்தில் சேர்க்கப்படும் காபி நரம்பு மண்டலத்தை தூண்டி தூக்கத்தை கெடுக்கும். மனப்பதற்றமும் ஏற்படும்.
இதையும் படிங்க: உள்ளங்கையில் அதிக வியர்க்கிறதா?.. இந்த விஷயங்களை கவனியுங்க.!