கணவன் பலாத்காரம் செய்ய.. ரசித்து வீடியோ எடுத்த பெண்.. ஜிம் ஓனருக்கு ஏற்பட்ட அவலம்.! 



Couple Arrested For Assault And Extortion In Vellore

வேலூர் மாவட்டத்தில் பெண் ஜிம் உரிமையாளருக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை நடத்தி, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, வேலூர் பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் 35 வயதுடைய பெண்ணுடன் எப்சிபா என்ற பெண் நட்பாக பழகியுள்ளார். பின்னர் தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

tamil news

இதனை நம்பி ஜிம் உரிமையாளர் எப்சிபாவின் வீட்டிற்கு சென்றபோது, அவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் மயங்கிய நிலையில், எப்சிபாவின் கணவரை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த காட்சிகளை எப்சிபா தனது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பேஸ்புக் பழக்கம்.. 78 வயது முதியவரின் அந்தரங்க வீடியோவை குடும்பத்திற்கு அனுப்பிவைத்த இளம்பெண்.!

பின்னர் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, இருவரும் சேர்ந்து ஜிம் உரிமையாளரிடம் தொடர்ந்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய தம்பதியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போதை மருந்து கொடுத்து செய்யக்கூடாததை மனைவிக்கு செய்த கொடூர கணவன்! குடும்பமே சேர்ந்து மிரட்டல்.... அப்பாவி பெண்ணின் பகீர் பின்னணி இதோ.!!!