சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு.. தீவிர கண்காணிப்பில் 1541 பேர்!

New corono cases at china


New corono cases at china

கடந்த வாரம் சீனாவில் புதிதாக எந்தவொரு கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக 1541 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகில் 100 நாடுகளுக்கும் மேலாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை சீனாவை விட அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகமாக உள்ளது.

Coronovirus

இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்துவிட்டதாகவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் புதிதாக எந்தவித தாக்கமும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் கொரோனாவை சீனா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது என பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஆனால் தற்போது சீனாவில் புதிதாக 1541 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்ததால் மட்டுமே சோதனை செய்யப்பட்டவர்கள் என்றும் இவர்களுக்கு இதுவரை எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் அந்நாட்டு சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.