சினிமா

அனிருத்தின் இசை அனைத்தும் காப்பியா? அதிரடியில் இறங்கிய கூகிள் நிறுவனம்!

Summary:

YouTube removed aniruth song from YouTube site

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் அனிருத். தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமான அனிருத் இன்ற சூப்பர் ஸ்டார் ரஜினி படத்திற்கு இசை அமைக்கும் அளவிற்கு வளந்துவிட்டார். விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி என தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

அண்மையில் இவர் இசையமைத்த கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடல் செம ஹிட்டடித்தது. 40 மில்லியனுக்கு மேல் ஓடியிருந்த இந்த பாடலை தற்போது யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

கல்யாண வயசு பாடல் ஒரு வெளிநாட்டு பாடலின் காப்பி ஆகும். மேலும் இதுபற்றி புகார் எழுந்தபோது அந்தப்பாடலுக்கான உரிமத்தை வாங்கியுள்ளதாக அனிருத் தெரிவித்திருந்தார். ஆனால் YouTube நிறுவனம் அந்த பாடலை நீக்கியதன் மூலம் இவர் அனுமதி வாங்காமல் தான் காப்பியடித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுபற்றி இன்னும் இவர் வாய்திறக்கவில்லை.


Advertisement