சினிமா

முழுவதும் ஊசியால் துர்க்கை சிலை செய்து அசத்திய இளைஞர்! கூறிய ஆச்சரிய காரணம்!!

Summary:

முழுவதும் ஊசியால் ஆன துர்க்கை சிலை! எப்படியிருக்கு பார்த்தீர்களா! அசத்திய இளைஞர்!!

தற்போது இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும்தான் என்பதை உணர்த்தும் வகையில் முழுவதும் ஊசிகள் மற்றும் ஊசி போட பயன்படுத்தும் குப்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி செய்த துர்க்கை அம்மனின் சிலையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாம் துப்ரி மாவட்ட நிர்வாக ஊழியராக பணியாற்றி வருபவர்
சஞ்சிப் பாசக். இவர் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புதுமையான யோசனைகளை கொண்டு துர்க்கை சிலை வடிவமைத்து வந்தார். இந்நிலையில் அவர் தற்போது முழுவதும் ஊசிகள் மற்றும் ஊசி போட பயன்படுத்தும் குப்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி துர்க்கை சிலை செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உலகமே கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் சிறப்பான தடுப்பூசிக்காக காத்துக் கொண்டிருந்தோம். தடுப்பூசி வந்தபிறகும் பல வதந்திகள் பரவ அச்சத்தில் பலரும் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வந்தனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டும்தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க ஒரே வழி. அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவே பல இடங்களிலிருந்து சேகரித்த ஊசிக் குப்பிகளை கொண்டு இந்த சிலையை வடிவமைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துர்க்கை அம்மன் சிலையை இரவு பகல் தூங்காமல் ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் அந்த இளைஞர் உருவாக்கியுள்ளாராம். இவரது முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    


Advertisement