இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!


Young tv actress jansi suicide

நாளுக்கு நாள் சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துகொன்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் டெல்லியை சேர்ந்த இளம் நடிகர் ஒருவர் பட வாய்ப்புகள் இல்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரை உலகில் சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஜான்சி. இவர் தெலுங்கில் எண்ணற்ற நாடகங்களில், தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலை இவரது தற்கொலை சம்பவம் தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

நடிகை ஜான்சிக்கு சூர்யா என்ற காதலர் இருந்ததாகவும், அவர் நடிகை ஜான்சியை காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த நடிகை ஜான்சி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு அவரது போன் மற்றும் சில ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.