தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி கர்ப்பம்.! விசாரணையில் அம்பலமான உண்மையால் தலைசுற்றிப்போன கணவர்!!

Summary:

Young girl sexually abused by college correspondent

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு கடந்த மாதம் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும் திருமணமாகி சில நாட்களிலேயே புது பெண்ணிற்கு வாந்தி, மயக்கம் என உடல்நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த நிலையில் மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். திருமணமான ஒரு மாதம் முடிவதற்கு முன்பே மனைவி நான்கு மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்த புதுமாப்பிள்ளை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதனை தொடர்ந்து இது குறித்து அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

அதாவது அப்பெண் சிவகங்கையில் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த போது தனக்கு அதிக மதிப்பெண் போடுவதாக ஏமாற்றி கல்லூரியின் தாளாளர் மற்றும் பாஜக மாவட்ட கலாச்சார பிரிவின் தலைவரான சிவகுரு துரைராஜ் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

 இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிவகுரு துரைராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement