தமிழகம் சினிமா

46 வருடத்திற்கு முன் வெளியான படத்தின் 2 ஆம் பாகத்தில் யோகிபாபு; டைட்டிலே வித்தியாசமா இருக்கே அப்ப கண்டிப்பா ஹிட்தா.!

Summary:

yoki pabu new movie - kasi yathirai - part-2

46 வருடத்திற்கு முன் வெளியான காசி யாத்திரை என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார். மேலும், இப்படத்திற்கு வித்தியாசமான புதிய பெயர் ஒன்றிணையும் சூட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானாதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் புகழ்மணி என்பவர் இயக்கும் இப்புதிய படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு பழம் பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

எஸ்பி முத்துராமன், இயக்கத்தில் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான படம் 'காசி யாத்திரை'. இந்த படத்தில், பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான சுருளிராஜன், மனோராமா, எம்.ஆர்.ஆர். வாசு, விகே ராமசாமி, சோ ராமசாமி, தேங்காய் சீனுவாசன், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement