சினிமா

ரகசியமாக, அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டது ஏன்? முதன்முதலாக விளக்கமளித்தார் நடிகர் யோகிபாபு!

Summary:

yogibabu talk about his immediate marriage

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் தற்போது அதிகமான ரசிகர்களை கொண்டு விளங்குபவர் யோகி பாபு. இவர் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது உடல்வாகுவை சிறிதும் பொருட்படுத்தாத  யோகிபாபு எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடிக்கக்கூடியவர்.

பிரபல ஹீரோக்களுடன் காமெடி நடிகராகவும்,  நடிகைகளை காதலிக்கும் மன்மதனாகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான நகைச்சுவை வேடங்களையும் ஏற்று நடித்துவந்த யோகிபாபுவிற்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் அவர்களது குலதெய்வ கோவிலில் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுடன் யோகிபாபுவிற்கு திருமணம் நடைபெற்றது.

முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த திடீர் திருமணம் குறித்து ரசிகர்கள் பலரும் பெரும் குழப்பத்தில் மூழ்கினர். இந்நிலையில் தனக்கு அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன் என நடிகர் யோகிபாபு விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு பலரையும் அழைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கனவு. 

ஆனால் ஒரு சில காரணங்களால் அழைக்க முடியவில்லை. தனது குடும்பத்தில் நேர்ந்த சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவசரஅவசரமாக திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக மார்ச் மாதத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில் அனைவரையும் அழைப்பேன் என்று கூறியுள்ளார். 
 


Advertisement