யார்னு தெரியாமல் யோகிபாபுவை வெளுத்து வாங்கிய காவல்துறை! காது நரம்புகள் வலிக்க தர்ம அடி!

தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகிபாபுவின் அசுர வளர்ச்சிபற்றி நடிகர் விஜய் பேசியிருந்தார்.
நடிகர் வடிவேலு திரையுலகில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சூரி அவரது இடத்தை பிடித்தார். ஆனால் அவரை அரைத்தமாவையே திரும்ப திரும்ப அறைகிறாரா என்ற விமர்சங்கங்கள் எழுத்தது. இதனால் நடிகர் யோகிபாபுவிற்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் சில வருடங்களுக்கு முன் மர்ம ஆசாமி அரங்கேற்றி வந்த நாச வேலையால், நடு இரவில் போலீசில் வசமாக சிக்கி யோகி பாபு, தர்மஅடி வாங்கிய சம்பவம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த போது ஒரு சில நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு முறை நாடகம் முடிந்து நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த நேரம் மர்ம ஆசாமி ஒருவர் கார், பைக் போன்றவற்றிற்கு நெருப்பு வைத்து ரித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். ஒருவேளை அது இவராக இருக்குமோ என சந்தேகித்த காவல் துறையினர் யோகி பாபுவின் காது நரம்பு வலிக்கும் அளவிற்கு அடித்துள்ளனர். பின்பு தான் நாடகத்தில் நடித்துவிட்டு வருவதாக யோகிபாபு நிரூபித்த பிறகே அவரை காவல் துறையினர் அனுப்பியதாக கூறியுள்ளார்.