எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் - காமெடி நடிகர் யோகி பாபு வெளியிட்ட ட்வீட்டிற்கு குவியும் லைக்குகள்!

எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் - காமெடி நடிகர் யோகி பாபு வெளியிட்ட ட்வீட்டிற்கு குவியும் லைக்குகள்!



yogi-babu-velitta-twit

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

Yogi babu

தற்போது யோகி பாபு நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பிகில் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலு‌ம் சில தினங்களுக்கு முன்பு பிகில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் அவருக்கு இருக்கும் பல சிரமங்களுக்கு இடையே கலந்துகொண்டார் யோகி பாபு. அப்போது அவர் விஜய்யுடன் கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது டிவிட்டரில் வெளியிட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என கூறியுள்ளார்.