யோகிபாபுவை பார்க்கும்போதெல்லாம் தல அஜித் கேட்ட ஒரே கேள்வி! ஓப்பனாக போட்டுடைத்த நடிகர்! என்ன தெரியுமா??Yogi babu interview about ajith

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தனது காமெடியால் அசத்தி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் யோகிபாபு. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 

அவரது கைவசம் தற்போது எக்கச்சக்க திரைப்படங்கள் உள்ளன. அண்மையில் கூட இவர் ஹீரோவாக நடித்திருந்த மண்டேலா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில சர்ச்சைகளும் எழுந்தது. காமெடி நடிகராக யோகிபாபு தல அஜித்துடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

yogibabu

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தல அஜித் குறித்து கூறுகையில், நான் இதுவரை வீரம், வேதாளம், விஸ்வாசம் மற்றும் தற்போது வலிமை என நான்கு படங்களில் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ளேன். முதல் 3 படங்களுடைய ஷூட்டிங்கில் உன்னை பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை,  கல்யாணம் பண்ணலை-னு கேட்டுக்கொண்டே இருப்பார்.  அப்போது நான் பொண்ணு பாக்குறேன், பொண்ணுதான் என்னை பார்க்க மாட்டேங்குது என்று நான் சொல்வேன்.

அதற்கு அவர் நீ கவலைப்படாத, உனக்கு சீக்கிரம் கல்யாணமாகும் பாரு என கூறுவார். பின்னர் தற்போது வலிமை பட சூட்டிங்கில் சந்தித்தபோது சந்தோசத்தில் கட்டிப்பிடித்து குடும்பம் தான் முக்கியம் என நிறைய அறிவுரை வழங்குவார் என யோகிபாபு கூறியுள்ளார்.