வாய்ப்பு தேடி அலைந்தபோது அந்த இயக்குனர்கள்.. உண்மையை உடைத்த யாஷிகா! ஷாக்கான ரசிகர்கள்!!



Yashika talk about his experience while searching movie chance

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் சிக்கினார்.

அதில் பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

yashika

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் யாஷிகா கூறியதாவது, தனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடி ஆடிஷனில் கலந்துகொள்ள சென்றபோது பல இயக்குநர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டனர். மேலும் சில இயக்குநர்கள் என்னை தவறான காட்சிகளை நடித்துக் காட்டுமாறு கேட்டார்கள். ஆனால், நான் அதையெல்லாம் செய்யாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.